[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா
  • BREAKING-NEWS தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு: கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டி!

dmdk-candidates-announced

தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசார பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே இடைத்தேர்தலும் நடக்கிறது.

திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் மற்றும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்துவிட்டன. வேட்பாளர்கள் அறிவிப்பையும் முடித்துவிட்டன. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிமுக கூட்டணி யில் இடம்பிடித்துள்ள, தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியிருந்தார். 


அதன் படி, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கள்ளக்குறிச்சியில் தேமுதிக துணைச் செயலாலர் எல்.கே.சுதீஷ், திருச்சியில், அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் தேமுதிக விசாரணைக் குழு தலைவர் அழகர் சாமி, வட சென்னையில் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close