[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

காரின் பின் பக்கத்தில் இழுத்துச் செல்லப்பட்டு இளைஞர் பரிதாப பலி

a-boy-pity-kills-in-accident-at-cuddalore

இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காரின் பின்பக்கத்தில் சிக்கி 10 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்து சென்று ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், அப்துல் மோஷின் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் நெய்வேலி நோக்கி திருமணத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெய்வேலி பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். கார் திடிரென கட்டுபாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தில் நெய்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பாலமுருகன், அப்துல் மோஷின் மீது மோதியது.

இதில் பாலமுருகன் என்பவர் படுகாயமடைந்தார். பின்னால் அமர்ந்து வந்த மோஷின் காரின் பின்பக்கத்தில் சிக்கி கொண்டுள்ளார். ஆனால் கார் ஓட்டுனர் அது  தெரியாமல் காரை ஓட்டிச் சென்றுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மோஷின் 10 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்து சென்ற கார்கூடல் கிராமத்தில் உறுப்புகள் சிதறி உயிழந்துள்ளார்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த  மோஷின் காணவில்லை என ஊ.மங்கலம் போலீசார் தேடிய வந்த நிலையில் சாலையில் இழுத்து சென்றது போல் இரத்த கரையை வைத்து கார் கூடல் கிராமத்தில் உறுப்புக்கள் சிதறி சடலமாக மீட்கபட்டார். இதனையடுத்து விபத்துக்கு காரணமான காரை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். சினிமா காட்சி போல நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close