[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

திமுக கூட்டணி எந்தெந்த இடங்களில் போட்டி ? இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்

mk-stalin-today-announce-about-dmk-alliance-party-constituency

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்க உள்ளார்.

திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், மதிமுக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி  ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

தொகுதி உடன்பாடு முடிவடைந்திருந்தாலும், கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது தெரியாமல் இருந்து வந்தது. இநநிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்க உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close