[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு : மதிமுகவுடன் பேச்சுவார்த்தை

dmk-alliance-meeting-with-mdmk

மக்களவை தேர்தல் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து மதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதியானது. மறுபுறம், காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நேற்று காலை திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்டாயமாக 2 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து மதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக முன்னாள் எம்பி கணேசமூர்த்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். திமுக சார்பாக துரைமுருகன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 

மதிமுக தரப்பில் இருந்து 3 தொகுதிகள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதிமுக சார்பில் 7 விருப்பத்தொகுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை மேலும் ஒருகட்டம் நடைபெறலாம் என்றும், இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்தால் தான் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச இன்று மதியம் 12.30 மணிக்கு வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close