[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ராஜஸ்தானில் மிரட்டும் சுயேட்சைகளின் முன்னிலை - ஆட்சியை பிடிப்பது யார்?

independent-candidates-leading-in-more-than-10-seats-in-rajasthan

5 மாநிலங்களில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் மட்டும் தான் ஒரளவுக்கு சிக்கல் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இல்லை. 95 முதல் 100 இடங்கள் வரை தான் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதில் மற்றொரு முக்கியமான விஷயம் காங்கிரஸ், பாஜக இடையே 10 முதல் 15 இடங்கள் தான் வித்தியாசம் உள்ளது. அதனால், கடைசி நேரத்தில் நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

அதனால், காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் வெற்றி ஆட்சி அமைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் குறிப்பாக, சுயேட்சை வேட்பாளர்கள் 10க்கும் அதிகமானோர் முன்னிலை வகிக்கின்றனர். அதேபோல், ஹனுமன் பெனிவாலின் ராஷ்டிரிய லோன் அந்திரிக் கட்சி 3 முதல் 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாரதிய பழங்குடியின கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. 

199 தொகுதிகள் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 100 இடங்கள் தேவை. அதனால், காங்கிரஸ் அல்லது பாஜக 80 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் நிலையில், மற்றவர்களின் உதவியுடன் ஆட்சியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்வார்கள். அதில், சுயேட்சைகள் மிகவும் முக்கியமான சக்தியாக இருப்பார்கள் என தெரிகிறது. அதேபோல், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் அந்த்ரிக் கட்சி ஆகியவை முக்கிய பங்களிப்பு செலுத்தும்.

         

தேர்தல் பிராச்சார கால கட்டத்தின் போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த பலரும் தங்களுக்கு சீட் வழங்காததால் அதிருப்தியை வெளிப்படுத்தி, வெளியேறினர். அதில் பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர். சிலர் மற்ற கட்சிகளின் இணைந்து போட்டியிட்டனர். பார்மெர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் தான் 5 முதல் 7 பேர் வரை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close