[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு 

polling-begins-at-telangana-and-rajasthan

119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கும் 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மாநிலம் முழுவதும் 32 ஆயிரத்து 215 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 1821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்களை தடுக்க மாநிலம் முழுவதும் மத்திய துணை ராணுவப்படையினர் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த காவலர்கள் என ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குப்பதிவினை கண்காணிக்க 446 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் 5 மணி வரையும், மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் உள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் கூட்டணி, பாரதிய ஜனதா என மும்முனைப் போட்டி  நிலவுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குபதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மீதமுள்ள ஒரு தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 51ஆயிரத்து 687 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களைத் தடுக்க ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் மாநிலப் பேரவைத் தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close