[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியீடு?

local-body-election-dmk-candidate-today-and-tomorrow-release

தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தலுக்கு பல்வேறு கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலே சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி மற்றும் 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார். இந்த வேட்பாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று (27-ஆம் தேதி) தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.

அதிமுக இவ்வாறு விறுவிறுப்பாக தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக இன்று இரவு அல்லது நாளை காலை தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் எனத் தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைத்த கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என குறிப்பிட்டிருந்தார். எனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதால், திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதே போல, உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக-வும் தனித்து தான் போட்டியிடும் எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close