[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

scholarship-for-students

சென்னை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ரா,அழகு மீனா இதுபற்றி கூறுகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த, சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற ‘www.scholarships.gov.in’ என்ற இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலம், புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க ஏற்கனவே ஆகஸ்ட் 31-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்த பின் கல்வி நிறுவனங்கள் அதை சரிபார்த்து, பெயர்ப் பட்டியலுடன் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகையை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close