[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
  • BREAKING-NEWS மே மாதத்திற்குள் 2,000 புதிய பேருந்துகள் வாங்க உள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்
  • BREAKING-NEWS பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க அரசு மானியமாக 50% வழங்கும் திட்டம் பிப்.24ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS மெரினாவில் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் உயர்கிறது- புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்-நடிகர் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
கல்வி & வேலைவாய்ப்பு 30 Jul, 2016 07:49 AM

புதிய கல்விக் கொள்கையில் ஒருமித்த கருத்து: மத்திய அரசு தீவிர முயற்சி

consensus-not-conflict-is-focus-of-javadekar-s-new-education-policy

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சி மே‌ற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக‌ பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ள வேளையில், கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையின் நகல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

எனினும், கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையின் ஒரு பகுதியை மட்டும் பொதுமக்களிடம் தெரியப்படுத்தியிருப்பது தவறான முடிவு என்று அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கல்விக் கொள்கையில் ஒரு‌மித்த கருத்தை எட்டுவதற்காக பல்வேறு தரப்பு மாணவர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்‌க அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதிய கல்விக் கொள்கையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் முரண்பாடுகள் எழுந்துள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close