[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
கல்வி & வேலைவாய்ப்பு 22 Jul, 2016 11:20 AM

வேலை தேடுவோருக்காக பிரத்யேக தேசிய வழிகாட்டி சேவை

searching-job-is-now-easy

பட்ட படிப்பை முடித்துவிட்டு அதற்கு ஏற்ற வேளையில் சேருவது தற்போது குதிரை கொம்பாக உள்ளது.தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரம் பேர். அவர்களுள் 80 சதவீதம் பேர் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இப்படி அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை எனும் பிரிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரத்யேக National Carrier Service (தேசிய வழிகாட்டி சேவை) என்ற இணைய தளத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன் கூறும்போது, படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்காக அரசு பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ‘தேசிய வேலை வழிகாட்டி’ என்ற சிறப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பட்ட படிப்பை முடித்தவர்கள் www.ncs.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆதார் அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு தங்களுக்கென தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு விவரங்களையும், வேலை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை வேலை தரும் நிறுவனத்தில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். இதேபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணையத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம். அரசு சார்பில் இது செயல்படுவதால் நம்பகத்தன்மையுடன் கூடிய பணி கிடைக்கும்.

இதேபோன்று வெளிநாடு செல்வோரும் இந்த இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அயல்நாட்டுப் பணிக்கு குறைந்த செலவில் பதிவு செய்து, நம்பகத் தன்மையுடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறலாம்.இந்த NCS சேவை தொடர்பான விவரங்களை பெற 18004251514 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் அறியலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close