[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
  • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
  • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
  • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
  • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
  • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்கும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு
  • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
கல்வி & வேலைவாய்ப்பு 21 Jul, 2016 03:52 PM

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

tnpsc-village-administrative-officers-jobs-cetrificate-verification-date-annoinced

ஆகஸ்ட்1ம் தேதி முதல் 8ம் தேதி வரை கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2014-2015 ஆம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 28.02.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 01.07.2016-ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தெரிவு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 01.08.2016 முதல் 08.08.2016 வரை நடைபெறவுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும்பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close