[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடப்பாண்டில் இல்லை: உச்ச நீதிமன்றம் உறுதி

supreme-court-refuses-to-interfere-with-neet-ordinance-for-now

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்களிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு மீது நீதிபதி அனில் தவே கடும் அதிருப்தி தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அதை அமல்படுத்தாமல் அவசர சட்டம் கொண்டு வந்திருக்கக் கூடாது என்று அவர் கருத்து தெரிவித்தார். அரசு ஏன் இவ்வாறு செய்தது? அதன் நடவடிக்கை சரியானதல்ல என்றும் நீதிபதி அடுக்கடுக்காக தனது அதிருப்தியை வெளியிட்டார்.

எனினும், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டுக்கு ஒத்தி வைக்கும் அவசர சட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டால், மேலும் குழப்பங்கள் ஏற்படும் என்பதால், இப்போதைக்கு அதில் தலையிட விரும்பவில்‌லை என்றும் நீதிபதி அனில் தவே தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close