[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்

1,234 காலிப் பணியிடங்கள்! கிராம சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா..?

tn-mrb-recruitment-village-health-nurse-post-1-234-vacancies-out

தமிழக மருத்துவத் துறையின் கீழ் கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கான 1,234 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிகள்:
கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse / Auxiliary Nurse Midwife)

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 1,234 காலிப்பணியிடங்கள் 

சம்பளம்:
குறைந்தபட்சமாக ரூ.19,500 முதல் அதிகப்பட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 13.11.2019
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 15.11.2019

தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.600 
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PH / DW - ரூ.300 

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)


கல்வித்தகுதி:
10-ஆம் வகுப்புடன் 18 மாத (Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers - Female) செவிலியர் தகுதி படிப்பையோ  அல்லது 12-ஆம் வகுப்புடன் கூடிய 2 வருட (Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers - Female) செவிலியர் தகுதி படிப்பையோ, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ அல்லது https://mrbofficer.online-ap1.com/village/- என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:
கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,
http://www.mrb.tn.gov.in/pdf/2019/VHN_2019_Notification_24102019.pdf - என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close