[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! - விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!

ssc-cgl-2019-exam-notifications-out

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில், குரூப் - ‘பி’ (Group-'B') மற்றும் குரூப் - ‘சி’ (Group-'C') பிரிவுகளின் கீழ் உள்ள  பல்வேறு பணிகளுக்கான CGL-2019 எனப்படும் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. அசிஸ்டண்ட்
2. ஆடிட்டர்
3. அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

மொத்தம் = 10,000+ காலியிடங்கள் வெளியாக வாய்ப்பு

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2019, மாலை 05.00 மணி வரை
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 27.11.2019, மாலை 05.00 மணி வரை
வங்கி ரசீது (Challan) மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 29.11.2019
(Tier-I) கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்: 02.03.2020 முதல் 11.03.2020 வரை 
(Tier-II & Tier-III) தேர்வுகள் நடைபெறும் நாள்: 22.06.2020 முதல் 25.06.2020 வரை 

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.1,51,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு: பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.

தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
2. மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்களுக்கு தேர்வுக்கட்டணம் - ரூ.100

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.

குறிப்பு: 
1. வயது தளர்வும் உண்டு.
2. பணிகளுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்களும் உண்டு.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு: 
பணிகளுக்கேற்ப கல்வித்தகுதியில் மாற்றங்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், https://ssc.nic.in/(அல்லது) http://www.sscsr.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. Tier-I - கணினி வழித்தேர்வு 
2. Tier-II - கணினி வழித்தேர்வு 
3. Tier-III - எழுத்துத் தேர்வு

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_22102019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close