[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

ssc-exam-phase-vii-posts-at-central-government-jobs-notifications-out

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில், பிரிவு-7 (Phase-VII) இன் கீழ் உள்ள குரூப் - ‘சி’ (Group-'C') போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. சயின்டிபிக் அசிஸ்டெண்ட் (Scientific Assistant)
2. டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Technical Assistant)
3. சப்-இன்ஸ்பெக்டர் (Fire)
4. மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff) உள்ளிட்ட பல்வேறு பணிகள்

மொத்த காலியிடங்கள் = 1,350+

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 06.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2019, மாலை 05.00 மணி வரை
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 02.09.2019, மாலை 05.00 மணி வரை
வங்கி ரசீது(challan) மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 04.09.2019
கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்: 14.10.2019 முதல் 18.10.2019 வரை 

தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
2. மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் - ரூ.100

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.

குறிப்பு: 
1. வயது தளர்வும் உண்டு.
2. பணிகளுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு முதல் அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு: பணிகளுக்கேற்ப கல்வித்தகுதியில் மாற்றங்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், https://ssc.nic.in/ (அல்லது) http://www.sscsr.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://www.sscsr.gov.in/SELECTION-POSTS-PHASE-VII-2019-NOTICE-dt06082019.pdf (அல்லது)
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_06082019.pdf- என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close