[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

சவுத் இந்தியன் வங்கியில் 42 ஆயிரம் சம்பளத்தில் வேலை

sib-job-notifications-out-probationary-clerks-probationary-officers

சவுத் இந்தியன் வங்கியில் புரொபிசனரி அதிகாரி, புரொபிசனரி கிளர்க் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. புரொபிசனரி அதிகாரி
2. புரொபிசனரி கிளர்க்

காலிப்பணியிடங்கள்:
1. புரொபிசனரி அதிகாரி - 160
2. புரொபிசனரி கிளர்க் - 385
மொத்தம் = 545 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2019
புரொபிசனரி அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 25.07.2019
புரொபிசனரி கிளர்க் பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2019

ஊதியம்:
1. புரொபிசனரி அதிகாரி என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.23,700 முதல் அதிகபட்சமாக ரூ.42,020 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
2. புரொபிசனரி கிளர்க் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.11,765 முதல் அதிகபட்சமாக ரூ.31,540 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
1. புரொபிசனரி அதிகாரி பணிக்கான தேர்வுக்கட்டணம்: 
பொது பிரிவினர்  - ரூ.800, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.200
2. புரொபிசனரி கிளர்க் பணிக்கான தேர்வுக்கட்டணம்: 
பொது பிரிவினர்  - ரூ.600, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.150

வயது வரம்பு:
புரொபிசனரி அதிகாரி பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும், புரொபிசனரி கிளர்க் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் பயின்று, குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.southindianbank.com/Careers/careerslist.aspx - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:
1. எழுத்துத் தேர்வு,
2. குழு கலந்துரையாடல்,
3. நேர்முக தேர்வு போன்ற பல்வேறு தேர்வு முறைகள்  மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும், இது குறித்த தகவல்களுக்கு, https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf & https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Officer_Notification_June_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close