[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

mbbs-bds-counselling-notifications-out

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாமாண்டு 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த
கலந்தாய்வு நடைபெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

படிப்புகள்:
எம்.பி.பி.எஸ் - 5 1/2 ஆண்டுகள்
பி.டி.எஸ் முதலாமாண்டு - 5 ஆண்டுகள்

முக்கிய தேதிகள்: 
அறிவிப்பு வெளியான தேதி: 07.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 07.06.2019, காலை 10.00 மணி முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2019, மாலை 05.00 மணி வரை
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2019, மாலை 05.00 மணி வரை
தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தற்காலிக தேதி: 02.07.2019
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி: 04.07.2019
மற்ற பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதி: 05.07.2019 முதல் 12.07.2019 வரை

விண்ணப்பக் கட்டணம்: 
அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கான கட்டணம்: ரூ.500
மேனேஜ்மெண்ட் / NRI கோட்டாவில் சேருவதற்கான கட்டணம்: ரூ.1,000

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.tnhealth.org/ மற்றும் www.tnmedicalselection.org - போன்ற இணையதள முகவரிகளில் சென்று விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அந்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அத்துடன் தகுந்த மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
The Secretary,
Selection Committee,
162, periyar E.V.R. High Road,
KilPauk,
Chennai - 600 010.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, http://www.tnhealth.org/online_notification/notification/N19061918.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close