[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

mbbs-bds-ranking-list-released

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், மூன்று மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

முதல் இடத்தை ஆதித்யா மகேஷ் என்ற மாணவியும், இரண்டாம் இடத்தை விக்னேசும், மூன்றாமிடத்தை ஞானவேலும் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

+2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆர்த்தி, தரவரிசைப் ‌பட்டியலில் பத்தாம் இடம் பெற்றுள்ளார். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 26,017 பேர் ‌விண்ணப்பித்தனர். இதில் 435 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சியுள்ள 25,379 பேர் பங்கேற்கும் கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்குகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2,723 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,055 பி.டி.எஸ் இடங்களும், 130 ஈ.எஸ்.ஐ இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருக்கின்றன.

கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் மூன்று சதவிகித இடத்திற்கு 92 பேரும், மூன்று இடங்கள் கொண்ட விளையாட்டுப் பிரிவுக்கு 316 பேரும், முன்னாள் ராணுவத்தினருக்கான 5 எம்.பி.பி.எஸ், ஒரு பி.டி.எஸ் இடங்களுக்கு 377 பேரும், கடந்த ஆண்டு +2 முடித்து இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3,266 பேரும் விண்ணப்பித்துளளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close