[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

எல்ஐசி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அதிகாரி பணிகள்: 8,581 காலியிடங்கள்!

lic-jobs-apprentice-development-officer-post-8-581-vacancies

இந்தியாவிலுள்ள பல்வேறு மண்டலங்களில் இருக்கும் எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில், அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிகள்:
அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் 

மண்டலம் வாரியாக காலியிடங்கள்:
போபாலை தலைமையிடமாக கொண்ட மத்திய மண்டலம் - 525 
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட கிழக்கு மண்டலம் - 922
பாட்னாவை தலைமையிடமாக கொண்ட கிழக்கு மத்திய மண்டலம் - 701
புதுடெல்லியை தலைமையிடமாக கொண்ட வடக்கு மண்டலம் - 1,130
கான்பூரை தலைமையிடமாக கொண்ட வடக்கு மத்திய மண்டலம் - 1,042
சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு மண்டலம் - 1,257
ஹைதரபாத்தை தலைமையிடமாக கொண்ட தெற்கு மத்திய மண்டலம் - 1,251
மும்பையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலம் - 1,753

மொத்தம் = 8,581 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 20.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.06.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த தொடங்கிய நாள்: 20.05.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 09.06.2019
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 06.07.2019 & 13.07.2019
முதன்மைத் தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 10.08.2019 

தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.50
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது 01.05.2019-க்குள், 21 வயது முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

ஊதியம் / ஊக்கத்தொகை:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில், ரூ.21,865 முதல் ரூ.55,075 வரை மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

க்ளாஸ்‘ஏ’ நகரத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, ரூ.37,345 மாத ஊக்கத்தொகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/licadomay19/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். 

தேர்வு செய்யும் முறை:
1. முதல்நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு
4. மருத்துவ தகுதி தேர்வு

பயிற்சி காலம்: ஒரு வருடம் / இரண்டு வருடங்கள்

மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close