[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

பிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு!

oppurtunity-for-plus2-passed-outs-to-join-indian-army

இந்திய ராணுவத்தில், 42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டத்தில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த ஆண்களிடம் இருந்து மட்டும்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சித் திட்டம்:
42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டம்

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 90 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 16 1/2 வயது முதல் அதிகபட்சமாக 19 1/2 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
அத்துடன் 01.07.2000 முதல் 01.07.2003-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில்,  www.joinindianarmy.nic.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யும் முறை:
எஸ்.எஸ்.பி மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சி காலம்: 5 வருடங்கள்

பதவி உயர்வு:
பயிற்சிக்கு பின் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற வாய்ப்புண்டு.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, 
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tes_42.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close