[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

எஸ்பிஐ வங்கியில் மேனேஜர் வேலை !

sbi-invites-online-applications-for-specialist-cadre-officers-post

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் 

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 19 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 16.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 02.06.2019

வயது உச்சவரம்பு: (31.05.2019)
அதிகபட்ச வயது வரம்பு: 35 வயது முதல் 50 வயது வரை பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
பணிகளை பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு. 

ஊதியம்:
தொடக்க ஊதியமாக ரூ.42,020 முதல் அதிகபட்சமாக ரூ.85,000 வரை சம்பளமாக
வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.125
பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.750

குறிப்பு:
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பி.இ / பி.டெக் / எம்.பி.ஏ / எம்.சி.ஏ போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அத்துறை சார்ந்த முன் அனுபவம் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு:
குறிப்பிட்ட பணிகளுக்கு, பணிகளை தகுந்தாற்போல் முன் அனுபவங்களில் மாற்றங்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://www.sbi.co.in/careers/ongoing-recruitment.html- என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

சலுகைகள்:
நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவோர்க்கு, விமானம் மற்றும் ரயில் கட்டணச்சலுகைகள் உண்டு.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/150519-DETAILED%20ENGLISH%20AD%20NO%204.pdf - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close