[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்!

igcar-conducting-summer-training-m-sc-physics-chemistry-students-for-six-weeks-stipac-19

கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், எம்.எஸ்.சி மாணவர்களுக்கு ஆறு வார கோடைக்கால பயிற்சி திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2019
கோடைக்கால பயிற்சி நடைபெறும் நாட்கள்: ஜூன் - 03, 2019 முதல் ஜூலை - 12, 2019

கோடைக்கால பயிற்சி: ஆறு வாரங்கள்

கல்வித்தகுதி:
பி.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பில், நன்கு பயின்று முதல் தர வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2019-20 ஆம் கல்வியாண்டில், முதலாமாண்டு எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


குறிப்பு:
2019-20 ஆம் ஆண்டு கடைசி வருடம் எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://forms.gle/DbRbbac1zQMBahmFA - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். அந்த விண்ணப்பத்தில் ‘Physics and
Chemistry of Nanomaterials - My Perspective’ - என்ற தலைப்பின் கீழ் கட்டுரையாக, அதிகபட்சம் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் சொந்தமாக எழுத வேண்டும்.

தேர்வு பெறும் மாணவர்களுக்கான சலுகைகள்:
1. ஆறு மாதத்திற்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2. மாணவர்கள் தங்குவதற்கு தேவையான செலவிற்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.
3. ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பயண சலுகை உண்டு.

மேலும், இது குறித்த தகவல்களை பெற, http://www.igcar.gov.in/igc2004/STIPAC_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி குறித்து எழும் சந்தேகங்களை, physics@igcar.gov.in / chemistry@igcar.gov.in - என்ற இ.மெயில் முகவரியில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close