[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

நர்சிங் படித்தவர்களுக்கு சவுதியில் 80 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

saudi-jobs-for-nursing-graduates-rs-80-000-salary

தமிழக அரசின் கீழ் செயல்படும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேசன் லிமிடெட் நிறுவனம், நர்சிங் படித்தவிட்டு வேலை தேடுபவர்களுக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சவுதி அரேபியாவில் பணிபுரிய, செவிலியர் எனப்படும் நர்சிங் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:
ஸ்டாஃப் நர்ஸ் - சவுதி அரேபியா

முக்கிய தேதிகள்:
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 19.05.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20.05.2019 முதல் 24.05.2019 வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
MOH, Saudi Arabian Delegates at Cochin.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
டிப்ளமோ இன் நர்சிங் - ரூ. 65,000
பி.எஸ்சி நர்சிங் - ரூ.80,000

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, டிப்ளமோ இன் நர்சிங் / பி.எஸ்சி நர்சிங் என்ற படிப்பில் தேர்ச்சியுடன், குறைந்தபட்சமாக 5 வருட பணி அனுபவம் அவசியமாக பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பிக்க விரும்புவோர், ovemclmohsa2018@gmail.com - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை 19.05.2019 - க்குள்அனுப்ப வேண்டும். மேலும் இந்தப் பணிகளின் பற்றிய விவரங்களை அறிய, 9566239685 & 8220634389 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மற்ற சலுகைகள்:
இலவச விமானக் கட்டணம், உணவு, தங்குமிடம் போன்று மற்றும் பல சலுகைகள் இதில் அடங்கும்.

மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களுக்கு, https://www.omcmanpower.com/ - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close