[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்த பரிந்துரை

recommendations-to-anna-university-to-conduct-tancet-exam

எம்.பி.ஏ, எம்.சி.ஏ., மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்த உயர்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக வளாகங்களுக்கு மட்டும் ஏயுசிஇடி (AUCET) என்ற தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனால், மற்ற கல்லூரிகளில் சேர டான்செட் (TANCET), அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர ஏயுசிஇடி என இரு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டுமா என்ற குழப்பம் மாணவர்களிடையே ஏற்பட்டது. இதற்கிடையே, ஏயுசிஇடி தேர்வை ரத்து செய்துவிட்டு ஒரே நுழைவுத் தேர்வை நடத்த உயர்கல்வித் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள இளநிலை படிப்புகளுக்கும் தனி கலந்தாய்வை நடத்திக்கொள்ளலாமா என அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. அதற்குப் பிறகே இறுதி முடிவை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் உயர்கல்வித் துறைக்கு இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாட்டால் மாணவர் சேர்க்கை சார்ந்த பல முடிவுகளில் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close