[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

tenth-exam-results-tomorrow-announced

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வை எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள், மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து
கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களிலும் அனைத்து நூலகங்களிலும் மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close