[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

புதிய தலைமுறை அறக்கட்டளையின் ‘விழுதுகள்’ இலவச உயர்கல்வி திட்டம்

puthiya-thalaimurai-trust-sponsored-free-higher-education-for-economically-backward-students

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பொருளாதார சூழ்நிலை காரணங்களால் மேற்படிப்பை தொடர இயலாத மாணவரா நீங்கள்? தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்த கல்லூரிகளோடு இணைந்து உங்களுக்கு இந்த ஆண்டும் உதவ முன்வந்திருக்கிறது ‘புதிய தலைமுறை’. ‘புதிய தலைமுறை’ மற்றும் ‘புதிய தலைமுறை அறக்கட்டளை’ இணைந்து வழங்கும் ‘விழுதுகள்’ இலவச உயர்கல்வித் திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ இருக்கிறது.  

எந்தெந்த படிப்புகள்?

*B.A (English, Journalism & Mass Communications- Music, Fashion Designing)
*B.E / B.Tech (EEE, Mech, Civil, Chemical, Bio-Tech, Agriculture, ECE , Bio-medical Engineering)
*B.Sc (Computer Science, Physical Education, Medical Records Science, Nursing, Bio-Tech, Hotel Management, Catering Technology)
*B.O.T
*B.PT.,
*B.C.A
*B.Com
*B.B.A
*M.Com
*M.B.A
*B.Ed (பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்)

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

*பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற, பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள மாணவர்கள் (ஆண் / பெண்) இருபாலரும் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
*ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
*சமூக பணியில் ஆர்வம் / அனுபவம் உள்ள மாணவர்களுக்கும், புதிய தலைமுறை அறக்கட்டளை நடத்தும் சமூக நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பங்களிக்க உத்தரவாதம் கொடுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமே கல்வித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். 

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

*விழுதுகள் திட்டத்தில் உங்கள் சகோதர / சகோதரிகள் மற்றும் உங்கள் உறவினர்கள் படித்திருந்தாலோ / படித்துக் கொண்டிருந்தாலோ நீங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.
*இத்திட்டத்தில் ஏற்கனவே படித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிப்போர் தங்களது பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலின், நகல், குடும்ப அட்டை மற்றும் வருமான சான்றிதழின் நகல்கள், உங்கள் பொருளாதார நிலை மற்றும் உங்களுக்கு கல்வியின் மீதுள்ள ஆர்வம் இவற்றைக் குறிப்பிட்ட உங்கள் பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்தோடு, புதிய தலைமுறை கல்வி வார இதழின் 24 ஆம் பக்கத்திலுள்ள விண்ணப்ப படிவத்தையும் பூர்த்தி செய்து இணைத்து அனுப்ப வேண்டும். இத்திட்டத்தில் பங்கு பெறும் கல்வி நிறுவனங்கள் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் புதிய தலைமுறை இதழில் வெளியாகும். 

இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள்?

1. எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்.
2. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், சிக்கிம்
3. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், AP - அமராவதி
4. செண்டு காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி, மதுராந்தகம்
5. டேனிஷ் அஹமது காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சென்னை
6. ARM காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி, மறைமலை நகர்.

விண்ணப்பங்கள் வந்து சேரக் கடைசி நாள்: 20.05.2019

இந்தத் திட்டத்தில பங்கேற்க விரும்பும் கல்லூரிகள் புதிய தலைமுறையை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
புதிய தலைமுறை அறக்கட்டளை, 24 ஜி.என். செட்டித்தெரு, தி.நகர், சென்னை - 600017.
தொலைபேசி எண்: 8754417500, 8754417308, 8754417338.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close