[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

போதிய மெட்டிரீயல் இல்லாமல் தவிக்கும் அரசு நீட் மைய மாணவர்கள்

16-000-neet-students-yet-to-receive-study-material

நீட் தேர்வுக்காக அரசு மையங்களில் பயிற்சி பெறும் 16,000 மாணவ, மாணவிகளுக்கு இன்னும் போதிய மெட்டிரீயல் வந்து சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு மையங்களில் மாணவ- மாணவிகளுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு மையங்களில் பயிற்சி பெறும் 16,000 மாணவ- மாணவிகளுக்கு இன்னும் நீட் படிப்புகளுக்கான மெட்டிரீயல் வந்து சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “ 14 அரசு மையங்களில் தங்கிப் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு போதிய நீட் மெட்டிரீயல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மெட்டிரீயலின் விலை ரூ.2000 ஆகும். கிட்டத்தட்ட 16,000 மாணவர்களுக்கு இந்த மெட்டிரீயலை வழங்க இயலாது.

குறைவான அளவிலேயே மெட்டிரீயல் இருப்பதால், வரும் காலங்களில் மாணவர்களுக்கு தனித்தனியாக மெட்டிரீயல் வழங்காமல் ஒரு குழுவாக பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 40 மாணவர்கள் ஒரு மையத்தில் பயற்சி பெறுகிறார்கள் என்றால் 4 செட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் அந்த 4 மெட்டிரியலை ஷேர் செய்து படித்துக் கொள்ள முடியும்.” எனத் தெரிவித்தார்.

இன்னும் 3 வாரத்திற்கும் குறைவான காலமே நீட் தேர்விற்கு உள்ளது. இந்நிலையில் 16,000 மாணவ- மாணவிகளுக்கு இன்னும் போதிய நீட் மெட்டிரீயல் வந்து சேராததால் மாணவ- மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த வெறும் 7 மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close