[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

ஓ.என்.ஜி.சி-யில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை!

ongc-recruitment-2019-for-engineering-graduates

ஓஎன்ஜிசி-யில் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) மற்றும் ஜியோ - சயின்ஸ் துறைகளில் கீழ் E1-லெவலில் பணிபுரிய, 785 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கேட் - 2019 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணிகள்:
அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE)
ஜியோலஜிஸ்ட்
கெமிஸ்ட்
ஜியோபிசிஸ்ட் உள்பட 17 வெவ்வேறு பணிகள்.

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 785 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 05.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2019, மாலை 06.00 மணி வரை
ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள்: 05.05.2019 முதல் 20.05.2019
நேர்முகத்தேர்வு தொடங்கும் தற்காலிக தேதி: 10.06.2019

வயது வரம்பு:
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பில் வேறுபாடுகளும், மாற்றங்களும் உண்டு. 

தேர்வுக்கட்டணம்:
பொது / EWS / OBC பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.370
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwD - தேர்வுக்கட்டணம் கிடையாது.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
எஸ்பிஐ வங்கி சல்லான் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்துவோர், ONGC Power Jyothi A/C No. 30827318409 of SBI, Tel Bhavan, Dehradun என்ற முகவரிக்கு செலுத்தவேண்டும். 
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது.

கல்வித்தகுதி:
1. அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக பி.இ / பி.டெக் (B.E / B.Tech) - பட்டப்படிப்பை மெக்கானிக்கல், சிவில், பெட்ரோலியம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், இன்ஸ்ட்ரூமெண்டேசன், புரொடக்சன் அல்லது முதுகலை பட்டப்படிப்பில் இயற்பியல், ஜியோ பிசிக்ஸ் போன்ற துறைகளில் பயின்று குறைந்தபட்சம் 60% தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2. மற்ற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக பி.இ / பி.டெக் / எம்.இ / எம்.டெக் / எம்சிஏ / எம்.எஸ்.சி போன்ற பட்டப்படிப்பு பயின்று குறைந்தபட்சம் 60% தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.ongcindia.com (அல்லது) https://eapplicationonline.com/ONGCGT2019/View/Instruction01.aspx - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். 

தேர்வு செய்யும் முறை:
கேட்- 2019 மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் = 60 மதிப்பெண்கள்
கல்வித்தகுதி = 25 மதிப்பெண்கள்
நேர்முகத்தேர்வு = 15 மதிப்பெண்கள்

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற 
https://eapplicationonline.com/ONGCGT2019/Document/Advertisement_English.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close