[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

today-is-the-last-day-for-tet-registration

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 

தமிழகத்தில் ‌ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெறவேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் வெளியிட்டது. 

www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 

கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close