[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

முதுகலை ஆசிரியர் பணி: டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

trb-notifications-out-for-computer-instructors-grade-i-post

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி மூலம் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இதில் கம்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்ஸ் கிரேடு - I (முதுகலை பட்டப்படிப்பு பணிநிலை) பிரிவில் பணிபுரிய 814 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பணி: கம்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்ஸ் கிரேடு - I

காலிப்பணியிடங்கள்: 
மொத்தம் = 814 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 01.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 20.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2019
கணினி வழித்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


சம்பளம்: 

குறைந்தபட்சமாக ரூ.36,900 முதல் அதிகபட்சமாக ரூ.1,16,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

தேர்வுக்கட்டணம்:
பொது / பி.சி / எம்.பி.சி பிரிவினர் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.250

தேர்வுக்கட்டணத்தை செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். 
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை மீண்டும் திரும்பப் பெற இயலாது.

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)

அதிகபட்சமாக 57 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகம் மூலம் முதுகலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், அத்துடன் B.Ed பட்டத்தையோ அல்லது B.A. Ed., / B.Sc. Ed., NCTE -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்றும் இருத்தல் வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில், M.E / M.Tech - என்ற முதுகலை பட்டயப்படிப்பில் கம்யூட்டர் சயின்ஸ் / கம்யூட்டர் இன்ஜினியரிங் / ஐ.டி / சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் என்ற துறையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் TRB -யின்,http://www.trb.tn.nic.in - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.trb.tn.nic.in/CI_2019/ci_2019.pdf- என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close