[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

என்.ஐ.டி, ஐஐடியில் படிக்க வேண்டுமா? - ஜெஇஇ முதன்மை தேர்வு - ஏப். 2019 அறிவிப்பு  

jee-main-april-2019-announced

இந்தியாவில் உள்ள தரம் வாய்ந்த பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, ஐஐடி போன்றவைகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜெஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு -ஏப்ரல் 2019க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வின் மூலம் பி.இ, பி.டெக், பி.ஆர்க், பி.டிசைன் போன்ற படிப்புகளில் சேர முடியும். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்  : 07.03.2019, இரவு 11.50 மணி
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்    : 08.03.2019
தேர்வு நடைபெறும் நாள்                   : 07.04.2019 முதல் 20.04.2019 வரை
முதல் தாள் தேர்வு முடிவு NTA-யின் இணையத்தில் வெளியாகும் தேதி     : 30.04.2019
இரண்டாம் தாள் தேர்வு முடிவு NTA-யின் இணையத்தில் வெளியாகும் தேதி : 15.05.2019

தேர்வுக்கட்டணம்:

ஜெஇஇ (முதன்மை) தாள்-1 (பி.இ / பி.டெக்) தேர்வு மட்டும்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி / பெண்கள் / திருநங்கை / PWD - ரூ.250

ஜெஇஇ (முதன்மை) தாள்-2 (பி.ஆர்க் / பி.பிளானிங்) தேர்வு மட்டும்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி / பெண்கள் / திருநங்கை / PWD - ரூ.250

ஜெஇஇ (முதன்மை) தாள்-1 (பி.இ / பி.டெக்) & ஜெஇஇ (மெயின்) தாள்-2 (பி.ஆர்க் / பி.பிளானிங்) :பி.ஆர்க் / பி.பிளானிங்): 
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.900
எஸ்.சி / எஸ்.டி / பெண்கள் / திருநங்கை / PWD - ரூ.450

வயது வரம்பு:

ஜெஇஇ முதன்மைத் தேர்வுக்கு வயது வரம்பு என்று எதுவுமில்லை. யாரெல்லாம் 2017, 2018 இல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களோ அவர்களும், 2019 இல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்களோ அவர்களுமே இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள்.

கல்வித்தகுதி:

பி.இ / பி.டெக் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு, 10+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், +2வில் இயற்பியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களோடு, வேதியியல் / உயிரியல் / டெக்னிக்கல் வெகேஷனல் என்ற பாடத்தை பயின்றவராக இருத்தல் வேண்டும்.

பி.ஆர்க் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு, 10+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், +2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை பயின்றவராக இருத்தல் வேண்டும்.

பி.பிளானிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு, 10+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், +2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை பயின்றவராக இருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இத்தேர்வுக்கு  www.jeemain.nic.in - என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். 

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, 
https://jeemain.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx?i=File&ii=32&iii=Y - என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close