[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

iocl-announced-apprentice-job-for-diploma-iti-degree-graduates

தென்னிந்திய மாநிலங்களிலுள்ள இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில், 1 வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி பணிகள்:
1. ட்ரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர்
2. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரீசியன்
3. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக் மெக்கானிக்
4. ட்ரேடு அப்ரண்டிஸ் - இண்ட்ரூமெண்ட் மெக்கானிக்
5. ட்ரேடு அப்ரண்டிஸ் - மெஷினிஸ்ட்
6. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - மெக்கானிக்கல்
7. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - இண்ட்ரூமெண்டேசன்
8. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - சிவில்
9. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்
10.டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல்
11.டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ்
12. ட்ரேடு அப்ரண்டிஸ் - அக்கவுண்டெண்ட்

பயிற்சிப் பணியிடங்கள்:
மொத்தம் = 420 + 16 *(PwBD) = 436 இடங்கள்

பயிற்சிக் காலம்:
சம்பளத்துடன் கூடிய 12 மாதங்கள் அதாவது 1 வருட காலம்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2019, மாலை 05.00 மணி வரை
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் - 2019.

வயது வரம்பு:
பொதுப் பிரிவினர்: 18 முதல் 24 வயது வரை
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்: 18 முதல் 29 வயது வரை
ஓபிசி பிரிவினர்: 18 முதல் 27 வயது வரை 

கல்வித்தகுதி:
1. ட்ரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (ஃபிட்டர்) என்ற  தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரீசியன் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (எலக்ட்ரீசியன்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக் மெக்கானிக் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (எலக்ட்ரானிக் மெக்கானிக்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
 
4. ட்ரேடு அப்ரண்டிஸ் - இண்ட்ரூமெண்ட் மெக்கானிக் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (இண்ட்ரூமெண்ட் மெக்கானிக்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ்  படிப்பை முடித்திருக்க வேண்டும்.

5. ட்ரேடு அப்ரண்டிஸ் - மெஷினிஸ்ட் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (மெஷினிஸ்ட்) என்ற   தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

6. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - மெக்கானிக்கல் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்   படிப்பை முடித்திருக்க வேண்டும்.

7. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - இண்ட்ரூமெண்டேசன் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் இண்ட்ரூமெண்டேசன்    இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

8. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - சிவில் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் இண்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங்   படிப்பை முடித்திருக்க வேண்டும்.

9. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

10. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்  படிப்பை முடித்திருக்க வேண்டும்.

11. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

12. ட்ரேடு அப்ரண்டிஸ் - அக்கவுண்டண்ட் என்ற பயிற்சிப் பணிக்கு, ஏதாவது ஒரு டிகிரி பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இந்தப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் (www.iocl.com) இணையதளத்திற்கு சென்று (Careers -> Latest job openings -> Engagement of Technical and Non - Technical Trade & Technician Apprentices in Southern Region (Marketing Division) - FY 2019-20) விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற
https://www.iocl.com/download/Notification-Southern-Region-for-the-year-2019-2020.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close