[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஜுன் 17ம் தேதி மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

mbbs-bds-admission-2016-17

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதியை மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் டாக்டர்.விமலா,

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். நாளை முதல், ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்களை, அதற்கென ஏற்படுத்தப்படும் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் டாக்டர்.விமலா தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் மாதம் 7ஆம் தேதி கடைசி நாளாகும்.

அடுத்த மாதம் 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 20ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்றும் ஜூலை மாதம் 18ஆம் தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா தெரிவித்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் விமலா கூறியுள்ளார். பொது நுழைவுத்தேர்வு இன்றி, வழக்கம்போல மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைய வேண்டாம் என்றும், தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் விமலா கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close