[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : 8வது படித்தவருக்கும் பணி

job-vacancy-in-chennai-anna-university-8th-std-also-eligible

அண்ணா பல்கலைக்கழகத்தில் 52 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 52 பணிகளுக்கு ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப உதவியாளர்கள், உதவி எழுத்தர், அலுவலக உதவியாளர், தச்சர், ப்ளம்பர் மற்றும் எலக்ட்ரிஷியன் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

தொழில்நுட்ப உதவியாளர்களில் மூன்று நிலையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் முதல் நிலை உதவியாளர்கள் பணிக்கு 9 பேர் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிஇ அல்லது பிடெக் (சிவில்/எலக்ட்ரானிக்) படித்திருக்க வேண்டும். இரண்டாம் நிலை உதவியாளர்கள் பணிக்கு 2 பேர் எடுக்கப்படவுள்ளனர். இதற்கு எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.காம் அல்லது எம்.எஸ்.சி படித்தவர்கள் தகுதியானவர்கள். மூன்றாம் நிலை உதவியாளர்கள் பணிக்கு டிப்ளமா (சிவில்/வேளாண்மை/எலக்ட்ரிகல்/தொல்லியல்) படித்த 14 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதுதவிர உதவி எழுத்தர் பணிக்கு ஏதேனும் பட்டப்படிப்பு படித்த ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதுதவிர லைன் ஆப்ரேட்டர் உதவியாளர்கள் பணிக்கு 8வது படிப்புடன் ஐடிஐ படித்த 15 பேர் எடுக்கப்படுகின்றனர். அத்துடன் தச்சர், ப்ளம்பர், எலக்ட்ரீசியன் ஆகிய உதவியாளர்கள் 3 பேரும், உதவியாளர்களாக மட்டும் 8வது படித்த 8 பேரும் வேலைக்கு எடுப்படவுள்ளனர். இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 26ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பேராசிரியர் மற்றும் எஸ்டேட் அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025 என்ற முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை இணைய தளத்தை அனுகலாம். 

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய அண்ணா பல்கழைக்கழக இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் : https://www.annauniv.edu/

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close