[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வறுமையை வென்று காட்டிய புலமை.. விடா முயற்சியால் கனவை நனவாக்கிய ஏழை மாணவன்..!

pudukkottai-student-cleared-neet-by-his-hard-work-and-dedication

முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக, ப்ளஸ் 2-வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்தாலும் விடா முயற்ச்சியால் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றதோடு மருத்துவ மாணவருக்கான தகுதியையும் பெற்றுள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளியின் மகன்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்து கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜன் மகன் கவியரசன். தனது இளம் வயதிலிருந்தே மருத்துவ கனவுகளோடு கல்வி கற்க தொடங்கிய கவியரசன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அரசு நடத்தும் தனித்திறன் தேர்வில் மாவட்டத்திலே முதலாவதாக வந்தார். இதனால் அன்றைய ஆட்சியர் சுகந்தியின் உத்தரவின் பேரில் அரசு செலவில் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அங்கே படித்த கவியரசன் 10 வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடத்தையும் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 1167 மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்தார். அப்போது 198 கட்ஆஃப் மதிப்பெண்களை பெற்று மருத்துவ கனவுகளோடு காத்திருந்த கவியரசனுக்கும் அவரது குடுத்பத்திற்கும் காத்திருந்தது பேரதிர்ச்சி. அது தான் மத்திய அரசின் நீட்தேர்வு அறிவிப்பு. அதன் பின் நடந்த நீட் தேர்வில் கவியரசன் குறைந்த மதிப்பெண்கள் பெறவே துவண்ட மனதோடு சென்னை அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவ மாணவராக சேர்ந்தார். ஆனால் அதனை படிக்க விருப்பமின்றி வீடு திரும்பினார். அவரது மருத்துவ கனவு நீட் தேர்வால் கானல் நீராகி போனதால் அவன் மட்டுமின்றி அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது.

இந்நிலையில் தான் அனிதாவின் மறைவிற்கு பின் திருச்சியில் தனியார் அறக்கட்டளை தொடங்கிய இலவச நீட் தேர்வு பயிர்ச்சி மையம் குறித்து தகவல் அறிந்த கவியரசன் அங்கு சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 331 மதிப்பெண்கள் பெற்றுள்ள கவியரசனுக்கு தாழ்த்தப்பட்ட சமூக இடஒதுக்கீட்டின் படி மருத்துவ மாணவராக தகுதி பெற்றுவிடுவார் என்பது உறுதியாகிவிட்டது. மருத்துவராக வேண்டும் என்ற தனது இளம் வயது கனவை பல போராட்டங்களுக்கு பின் சாதித்து காட்டிய கவியரசனை அவனது குடும்பத்தினர் மட்டுமின்றி பலரும் பாராட்டி மகிழ்கின்றனர்.

இதுகுறித்து கவியரசன் கூறுகையில் தன் தந்தை கட்டிட கூலிவேலை செய்துதான் தன்னையும் தன் தம்பி தங்கைகளையும் படிக்க வைத்து வருவதோடு குடும்பத்தையும் பார்த்து வருவதாக கூறினார். அரசு கட்டி கொடுத்த காலனி வீட்டில் வசித்தாலும் சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டதால் கல்வியில் ஆர்வம் காட்டி படித்ததாக தெரிவித்தார். கடந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் தன்னால் மருத்துவ மாணவராக முடியாவிட்டாலும் இந்த ஆண்டு திருச்சியில் உள்ள  தனியார் அறக்கட்டளை தனக்கு அளித்த இலவச பயிற்சியால் தன்னால் 331 மதிப்பெண்களை பெறமுடிந்தது என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார். மருத்துவராகி தன்னைபோன்று ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close