[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

இந்திய ரயில்வே துறையில் 62,907 பேருக்கு வேலை

latest-railway-job-notification

இந்திய ரயில்வே துறையில் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு “எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்” பக்கத்தில் வெளியாகியுள்ளது. 

இந்திய ரயில்வே துறையில் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல் ஹெல்பர், மெக்கானிக்கல், சிக்னல் & டெலிகம்யூனிகேஷன் பிரிவுகளில் பணிகள் இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். 

சம்பளம்: ரூ.18000/- (LEVEL 1 OF 7TH CPC PAY MATRIX)

விண்ணப்பிப்பது எப்படி?.

1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ஆண்களுக்கு மட்டும்). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 (Refundable). விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
2. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்திற்குச் சென்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.  
3. பின்னர், Login id மற்றும் பிறந்த நாள் மற்றும் வருடத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பகுதிக்குச் செல்லவும். அதில் சரியான மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்கவும். 
4. செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன. 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி: 10.02.2018 முதல் 12.03.2018 வரை
விவரங்களுக்கு: http://www.rrbchennai.gov.in (10.2.2018 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்) 

மேலும் விவரங்களுக்கு: http://www.rrbchennai.gov.in/downloads/cen-022018/detailed-cen-022018-english.pdf

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close