[X] Close
JUST IN
  • BREAKING-NEWS போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்
  • BREAKING-NEWS வனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
  • BREAKING-NEWS கோவையில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்- டீன் அசோகன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல்
  • BREAKING-NEWS "பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்": பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு

நீட்: தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

law-ministry-approves-neet-law

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்திய மருத்துவக் கவுன்சிலிங் விதிப்படி, எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான‌ கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களை தேர்வு செய்ய ஓராண்டுக்கு மட்டும் தமிழக அரசு விதிவிலக்கு அளிக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டால் அதை மத்திய அரசு பரிசீலிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு இயற்றிய அவசர சட்ட மசோதாவை‌ நேற்று முன் தினம் சுகாதா‌ரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்திருந்தார். 

இந்நிலையில் தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close