[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

tamilnadu-government-appealed-to-supreme-court-to-oppose-85-internal-matter

மருத்துவ படிப்பில் 85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதமுள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனிடைய 85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்திருந்தார்.

அதனடிப்படையில் தற்போது தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் மாநில அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்யவும் அந்த மனு கோரியுள்ளது.

 


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close