[X] Close
JUST IN
கல்வி & வேலைவாய்ப்பு 23 Jul, 2017 09:53 PM

பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு?... அமைச்சர் பதில்

one-nation-one-test-for-engineering-in-discussion-stage-javadekar

பொறியியல் படிப்புக்கு நாடுதழுவிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதேபோல பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவருவது குறித்த விவகாரம் ஆலோசனை என்ற அளவில் மட்டுமே இருப்பதாகவும், அதுகுறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் விவகாரம் குறித்து பேசிய அவர், வரும் 2018 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தாண்டு நடந்த நீட் நுழைவுத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள், மற்ற பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளை விட எளிமையாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close