JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
கல்வி & வேலைவாய்ப்பு 16 Mar, 2016 01:27 PM

சிபிஎஸ்இ கணிதத் தேர்வை ரத்து செய்ய மக்களவையில் வலியுறுத்தல்

நடந்து முடிந்த சிபிஎஸ்இ கணிதத் ‌தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் உறுப்பினர் கேபி வேணுகோபால், அண்மையில் நடைபெற்ற அந்தத் தேர்வுந மிகவும் கடினமாக இருந்ததாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ மாணவர்க‌ள் அதிருப்தி தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் கூறினார். ஆகவே, குறிப்பிட்ட அந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் வேணுகோபால் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவ‌கார அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads