[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
 • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
 • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
கல்வி & வேலைவாய்ப்பு 14 Jul, 2017 05:31 PM

தாமதமாகும் மருத்துவ கலந்தாய்வு: தவிக்கும் மாணவர்கள்

delayed-medical-counselling-students-affected

மருத்துவக் கலந்தாய்வில் ஏற்பட்டு வரும் தாமதம், மருத்துவப் படிப்பை மட்டுமல்ல பிற தொழில்சார் படிப்புகளின் க‌லந்தாய்வுகளையும் பாதித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 20-ஆம் தேதி தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகளின் தாமதம் காரணமாக ஜூலை 17-ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் தமிழக அரசு அறிவித்த மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம்‌ தற்போது ரத்து செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மேல்முறை‌யீட்டிற்‌கு செல்லுமேயானால் மீண்டும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படு‌ம் சூழல் உருவாகும். ‌மருத்துவக் கலந்தாய்வு தாமதத்தால் ஜூன் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு, தற்போது ஜூலை 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேளாண் படிப்புகளுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு நிறைவு பெற்றிருந்தாலும், இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 12-ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் மருத்துவக் கலந்தாய்விற்கு பிறகுதான் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.

ஜூலை 19-ஆம் தேதி கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்க‌ழகம் அறிவித்திருந்தாலும், மருத்துவக் கலந்தாய்வை பொறுத்து மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடை மருத்துவக் கலந்தாய்வும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கலாமா என ஆலோசிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய்வு தாமதம் அதனையும் பாதித்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close