JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
கல்வி & வேலைவாய்ப்பு 15 Mar, 2016 03:22 PM

சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு?

Cinque Terre

சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்பு கணிதத் தேர்வில் வினாக்கள் மிகக் கடினமாக இருந்ததால், மறுத் தேர்வு வைக்க கோரிக்கை எழுந்துள்ளது. அது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என சி,பி.எஸ்.இ மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ கணிதத் தேர்வில் கணக்கீடுகள் அவசியப்படும் வினாக்கள் பெருவாரியாக இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க கூடுதல் நேரமானதால், முழுமையாக பதிலளிக்க இயலாத மாணவர்கள் பலர் அழுதுகொண்டே தேர்வு மையத்தை விட்டு வெளியேறியதாக பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை மண்டலத்திற்கு மட்டுமின்றி தில்லி, அஜ்மிர் உள்ளிட்ட மண்டலங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களும் கடினமாக இருந்ததாகவே பள்ளிகள் தரப்பில் கூறப்படுகின்றன. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மறு தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படுமா என சி.பி.எஸ்.இ-யின் சென்னை மண்டல இயக்குநர் ஸ்ரீநிவாசனை தொடர்பு கொண்டு கேட்டது புதிய தலைமுறை.

அனைத்து கோரிக்கைகளையும் சி.பி.எஸ்.இ தலைமையகத்திற்கு அனுப்ப முறையான வழி இருப்பதாகவும், அதன் மூலம் கோரிக்கைகள் பெறப்பட்டு வல்லுநர் குழுவைக் கொண்டு தக்க முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads