[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
கல்வி & வேலைவாய்ப்பு 06 Jun, 2017 06:13 PM

நீட்-லிருந்து நீங்குவதற்காக காத்திருக்கிறோம் - தமிழக அரசு

wait-for-relieving-from-neet

 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கூறியுள்ளது. 
நீட் தேர்வு தொடர்பான வழக்கில், பதில் மனுத் தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்துவதே அரசின் கொள்கை எனக் கூறியுள்ளது. இந்த வழக்கில் சிபிஎஸ்சி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானால், அனைவருக்கும் மறுதேர்வு நடத்துவது சாத்தியமில்லை. இதனால் தான் மாறுபட்ட வினாக்கள் கொண்ட வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. ஒரே தரத்தில் வெவ்வேறு வினாக்கள் கொண்ட 10 வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலம், இந்தியில் மட்டும் 90.75 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். மற்ற மொழிகளில் 9.25 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதினர். முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த தடையால், ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கை பாதிக்கும். நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து குஜராத்தி, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட நீட் தேர்வு வினாத்தாள்களை தமிழில் மொழி பெயர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிபிஎஸ்இ-க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.  
புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஜெரோபோ கிளாட்வின் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வை ரத்து செய்து 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் சிபிஎஸ்இயும் பதில் மனுத் தாக்கல் செய்தன. 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close