[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

சீர்காழி அருகே குடி போதையில் விழுந்து கிடந்த பள்ளி மாணவர்கள்

drunken-school-students-and-indifferent-teachers-at-sirkazhi

சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்கள் குடி போதையில் சாலையில் விழுந்துகிடந்தனர்.

11 ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் காலை இடைவேளை நேரத்தில் பள்ளியை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரசு மதுபான கடையில் அதிக அளவில் மதுவை குடித்தாக கூறப்படுகிறது.மது போதையில் மாணவர்கள் தெற்குமாட வீதியில் சாலை ஓரம் மயங்கி விழுந்துகிடந்தனர்.

காலை 12 மணி முதல் சாலையோரம் கிடந்த மாணவர்கள் பின்னர் அருகில் இருந்த கடை வாசலில் படுத்தனர். மாணவர்கள் மது போதையில் மயங்கி கிடப்பது குறித்து பொதுமக்கள் பள்ளிக்கு தகவல் கொடுத்தும் ஆசிரியர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.காவல் துறையினர் மாணவர்களிடம் விசாரித்து அவர்கள் வீட்டுக்கு தகவல் அளித்தனர்.பின்னர் மாணவர்கள் ஆட்டோவில் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close