[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மேல்நிலை பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

candidates-can-apply-for-higher-secondary-exam-private-examinor

வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மேல்நிலை பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வரும் திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 24-ஆம் தேதி மாலை வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென கல்வி மாவட்ட வாரியாக தனித்தனி சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக் கட்டணம்‌, ஆன்லைன் பதிவு கட்டணத்தை சேவை மையத்தில் பணமாக செலுத்த வேண்டும். உரிய சான்றிதழ்களை கொண்டு சென்று சேவை மையத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்வோருக்கு குறிப்பிட்ட விண்ணப்ப எண் வழங்கப்படும். சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close