[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இன்று இரவு மும்பை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எந்த மொழியில் நடித்தாலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி - நடிகர் அரவிந்த் சாமி
  • BREAKING-NEWS தனது நடிப்புத் திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி - இளையராஜா
  • BREAKING-NEWS ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் வருகிறது, குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இந்தியாவில் மிகவும் திறமையான நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் - இளையராஜா
  • BREAKING-NEWS கட்சி அலுவலகத்திலுள்ள ஜெயலலிதா சிலையின் முகம் சீரமைக்கப்படும் என முதல்வர் உறுதி - மாஃபா பாண்டியராஜன்

தமிழக பள்ளியில் 3D தொழில்நுட்பத்துடன் கல்வி பயில வசதி

tn-first-state-to-introduce-irat-for-class-10-12

தமிழத்தில் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தங்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் முப்பரிமாண (3D) தொழில் நுட்பத்தில் புதிய ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

TN Schools Live என்னும் பெயரில் இந்த மொபைல் ஆப்பை, தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கியுள்ளது. இதில் மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடக்குறிப்புகள், 3டி தொழில்நுட்பத்தில், தமிழ் மொழியில் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். லேப்டாப், கம்யூட்டர், டேப்லேட், மொபைல் போன்றவற்றில் இந்த ஆப்-பை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் உள்ள பாடக் குறிப்புகள் இந்த ஆப்-பில் மாணவர்களுக்கு ஏற்றவாறு பதிவேற்றப்பட்டு உள்ளது. இணைய வசதி இல்லாத மாணவர்களும் பயன் பெறும் வகையில் இந்த ஆப்- குறுந்தகடுகளிலும் பதிவேற்றப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close