[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
கல்வி & வேலைவாய்ப்பு 04 Nov, 2016 08:42 AM

இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

siddha-and-ayurveda-medical-council

இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது.

இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியமுறை மருத்துவப் படிப்புகளான பி.எஸ்.எம்.எஸ்.(சித்த மருத்துவம்), பி.எச்.எம்.எஸ் (ஹோமியோபதி), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேதம்), பி.யு.எம்.எஸ். (யூனானி), பி.என்.ஒய்.எஸ். (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா), ஆகிய படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நாளை(நவ.5) முதல் திங்கட்கிழமை வரை (நவ.7) நடைபெறவுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்பவர்களுக்கு குறுந்தகவல் மூலமும், அழைப்புக் கடிதமும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் தமிழக அரசின் www.tnhealth.org என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் தங்களது விண்ணப்பப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அசல் சான்றிதழ்: கலந்தாய்வில் தங்கள் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், தற்சமயம் படித்து வரும் கல்லூரியிலிருந்து ஆளறிச் சான்றிதழ், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து நவம்பர் 1 அல்லது அதற்குப் பின்னரோ சென்னையில் மாற்றத்தக்கதான Director of Indian Medicine and Homeopathy, Chennai - 106 என்ற பெயரில் ரூ.5,500-க்கு கேட்பு வரைவோலை ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.

நவம்பர் 5-ஆம் தேதி முதலில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வில் பங்கேற்க 106 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்-ஆஃப் மதிப்பெண் 199 முதல் 187.50 வரையுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ள மொத்தம் 750 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கைக் கடிதம் பெறும் மாணவர்கள் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் அந்தந்தக் கல்லூரியில் இணைய வேண்டும். இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close