[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
  • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கல்வி & வேலைவாய்ப்பு 03 Nov, 2016 08:22 AM

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

plus-2-specail-exam-result

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தங்களது தேர்வு முடிவை காலை 10 மணி முதல் இணையதளத்திலிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (நவ.3) முதல் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in என்ற இணைதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விடைத்தாள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: செப்டம்பர் 2016 தேர்வுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) பிற்பகல் 3 மணி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நேரில் சென்று உரிய கட்டணத்தை பணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்வது அவசியம்.

விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம்: பகுதி-1 மொழி - ரூ.550 (இரு தாள்களுக்கு); பகுதி-2 மொழி (ஆங்கிலம்) - ரூ.550 (இரு தாள்களுக்கு); பிற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.275. மறுகூட்டல் கட்டணம்: பகுதி -1 மொழி, பகுதி - 2 மொழி (ஆங்கிலம்), உயிரியல் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.302 (இருதாள் பாடங்கள்), பிற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.205. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close