[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
கல்வி & வேலைவாய்ப்பு 05 Oct, 2016 08:39 AM

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் முறை ரத்து: சிபிஎஸ்இ அறிவிப்பு

no-re-evaluation-of-class-12-marks-from-2017-cbse

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணபிக்கும் முறையை வரும் 2017ஆம் கல்வியாண்டு முதல் முடிவுக்குக் கொண்டுவருவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

மாணவர்கள், தாங்கள் பெற்ற மதிப்பெண் குறித்து சந்தேகம் எழும்போது விடைத்தாளினை மறுகூட்டல் விண்ணப்பிக்கும் நடைமுறையை சிபிஎஸ்இ அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வந்தனர்.

இந்தநிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் வரும் 2017ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முறையான காரணங்களைக் கூறி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மொத்த மாணவர்களில் 1.8 சதவீதம் பேர் மட்டுமே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், முறையான காரணங்களைக் கூறி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 0.05 சதவீதம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடைத்தாட்களைத் திருத்தும் பணி மூன்று கட்டங்களாக நடைபெறுவதால், இதில் தவறு ஏற்பட வாய்ப்புகள் குறைவே என்றும் சிபிஎஸ்இ தரப்பில் கூறப்பட்டுள்ளது. முறையான காரணங்களுக்காக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கோரிக்கைகள் மீதான முடிவெடுக்க குழு ஒன்று அமைக்கப்படும் என்று சிபிஎஸ்இ தலைவர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார். அதேநேரம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதில் தற்போதைக்கு மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close