[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

salem-periyar-university-announcement

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்லூரிகள் தொடங்கவும், ஏற்கனவே இணைவு பெற்ற கல்லூரிகளில் 2017-2018-ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் புதிய மற்றும் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்க, வருகிற 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பல்க‌லைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் இதற்கான விண்ணப்பத்தை 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அரசு கலைக் கல்லூரிகள் இதற்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை எனவும், ஆனால் அரசு கல்லூரிகளில் புதிய வகுப்புகள் மற்றும் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்கிட கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-2018 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் புதிதாகத் தொடங்கப்படும் கல்லூரிகள் அரசு ஆணை பெற்ற பின்பே பல்கலைக்கழக இணைவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close